2015 பிப்ரவரி மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

பிப்ரவரி 2015, மாத இதழ்

வான்மழை போல் வாழ்ந்தவர்!

வான்மழை போல் வாழ்ந்தவர்!

அஞ்சலி விகடன் குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் (79), மறைவு (2014 டிசம்பர் 19) தமிழ்ப் பத்திரிகைத் துறையில் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பண்பாட்டுத் தளத்திலும் மிகப் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் மாபெரும் சாதனையாளரான வாசன் அவர்கள் காலமான... Read more

நன்றி! எல்லோருக்கும் நன்றி!!

நன்றி! எல்லோருக்கும் நன்றி!!

காவியன் கட்டுமான நிறுவனம் பி.லிட். மற்றும் 'பல்சுவை காவியம்’ மாத இதழ் இணைந்து, 2015 ஜனவரி 3 ஆம் நாள் மதுரையில் நாள் முழுதும் நிகழ்த்திய தமிழர் பண்பாட்டு விழா, ஒரு மாபெரும் வெற்றிகரமான விழாவாக அமைந்தது என்பதே விழாவில் பங்கு... Read more

வங்க மண் தந்த தியாகத் தங்கம்!

வங்க மண் தந்த தியாகத் தங்கம்!

நாமிருக்கும் நாடு-10 இந்தியச் சுதந்திரப் போர், மகாத்மா காந்தி போன்ற மாபெரும் தலைவர்களை உருவாக்கியது என்பது உண்மை. அதே போன்ற இன்னொரு உண்மை, அந்த ஒப்பற்ற தியாகிகளே, விடுதலைப் போரை முன் எடுத்தார்கள் என்பதாகும். விடுதலைப் போராட்டம், ஒற்றைத் தலைமையின் வழிகாட்டுதலோடு, ஒற்றைப்... Read more

முத்தமிழ் வளர்த்த விழா!

முத்தமிழ் வளர்த்த விழா!

சங்கம் வளர்த்த மதுரையில்...முத்தமிழ் வளர்த்த விழா!- நிகழ்வுகளும் பதிவுகளும்   'பல்சுவை காவியம்’ பொங்கல் மலரை மதுரை மேயர் வெளியிட  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் மூ.இராசாராம் ஐ.ஏ.எஸ் பெற்றுக்கொள்கிறார். படம் : (இடமிருந்து) கற்பூரசுந்தரபாண்டியன் ஐ.ஏ.எஸ் (பணி நிறைவு), சி.தீனதயாளபாண்டியன், மூ.இராசாராம்,... Read more

வழுக்கை மறைய எளிய வழிகள்!

வழுக்கை மறைய எளிய வழிகள்!

"கருதாலை கலக்கி நின்ற கேசமேதொற்றுண்ணிக்கு காலனாங் கண்டீரே' என்கிறார் பொய்யாமொழிச் சித்தர்.நமது தலையின் தோல் பகுதியில் பாக்ட்டீரியா மற்றும் பூஞ்சைகளால் பரவி நிற்கும் - தொல்லை தரும் தொற்றுண்ணியைத் தான் நாம் பொடுகு என்கின்றோம். பொடுகுகளால் நமது கேசத்தில் வறட்சித் தன்மை... Read more

இலக்கியம் வேறு! இலக்கிய அரசியல் வேறு!

இலக்கியம் வேறு!  இலக்கிய அரசியல் வேறு!

"எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல,வேள்வி அல்ல, பிரசவ வேதனை அல்ல, ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல, பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல, பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல, வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி, என் சுயத்தை தேடும் முயற்சி!''... Read more

உலக சிறுகதை

உலக சிறுகதை

வெறும் நுரை (டொனால்ட் ஏ ஏட்ஸ் கொலம்பிய எழுத்தாளர். பத்திரிகையாளராகவும், அயல் உறவுத்துறை அதிகாரியாகவும் செனட்டராகவும் பணியாற்றியவர். நிறைய கட்டுரைகளும், குறிப்பிடத்தக்க சிறுகதைகளும் எழுதியவர். 'வெறும் நுரை மட்டும்' என்ற இந்த கதையாலேயே கொலம்பியா முழுக்க பிரபலமடைந்தவர். லத்தீன் அமெரிக்க சிறுகதைத் தொகுப்புகளில்... Read more

காவிய மடல்கள்

காவிய  மடல்கள்

"தமிழர் பண்பாட்டு விழா'' அழைப்பு மடல் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. தங்கள் விழா எல்லாவகையிலும் வெற்றிகரமாக நடந்ததென அறிந்து மகிழ்ந்தேன். 'பல்சுவை காவியம்' பொங்கல் மலர் மலர்ந்து மணம் வீசியது. மூன்றாம் ஆண்டிலும் தொடர்ந்து சாதனை புரிய என்... Read more

நமது நூலகம்

நமது நூலகம்

மகாபாரதம் எனும் 'மானுட நேசம்’சங்க இலக்கியங்களானாலும் மகாபாரதம் போன்ற பெரும் புராணங்களானாலும்    அதன் உள்ளே வருகிறவரெல்லாம் அவற்றை மேலும் மேலும் விரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாசலை திறந்து விட்டுக் கொண்டே இருக்கிறது. காரணம் அவை அறத்தைப் பேசுகின்றன. நல்லவை எப்போதும் நான்கு... Read more

மண்ணும் மக்களும்

மண்ணும் மக்களும்

தர்மகுட்டை அழகம்மாவுக்கு இருப்புக்கொள்ளவில்லை. வீட்டிலிருந்து முக்கத்திற்கு வருவதும், 'ஆம்படையா’னுக்காகக் காத்துக்கொண்டு நிற்பதும், மறுபடியும் வீட்டுக்குப் போவது மாகவே இருந்தாள். சாயங்காலம் ஆக ஆகக் கொஞ்சம் பயமும் பதட்டமும் சேர்ந்துகொண்டது. ஆம்படை யானோடு கூட போனவர்களின் வீட்டிற்குப் போய் விசாரித்தாள். "யாரு ஆகவந்தா (எதற்கெடுத்தாலும்... Read more

லீட் இந்தியா

லீட் இந்தியா

சமூகத்தின் மேல் பற்றும் நேசமும் கொண்ட லட்சியம் நிறைந்த மாணவர்களை உருவாக்கும் பணியில் ஆண்டுதோறும் 'ஆளுமைத்திறன் முகாம்'களை நடத்தி வருகிறது லீட் இந்தியா (LEAD INDIA) அமைப்பு.திரு.சி.தீனதயாளபாண்டியனை நிர்வாக அறங்காவலராகவும் திருமதி.அனிதா தீனதயாளபாண்டியனை அறங்காவலராகவும் கொண்டு செயல்பட்டுவரும் காவியன் அறக்கட்டளையின் லீட்... Read more

நன்றொன்று சொல்வேன்

நன்றொன்று சொல்வேன்

சென்னை அன்று வாரியங்கள் என்ற சொல் புழக்கத்துக்கு வரவில்லை. ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் என்பதே போதுமானதாக இருந்தது. நான் முதலில் பேருந்துப் பயணம் செய்தபோது, நீல நிறத்தில் இருந்தது. தியாகராய நகரத்திலிருந்து ஐந்து வழித்தடங்களில் பேருந்துகள் ஓடின. சின்னச் சின்னப் பேருந்துகள். சற்றுப் பெரிதாகவும்... Read more

விதை

விதை

(காவியம் பரிசு வென்ற கதை)ஐபோன் சிணுங்கியது. ஸ்கிரீனில் தெரிந்தது அப்பாவின் முகம். தம்பி என அழைக்கும் அவர் குரலுக்காய் காத்திருந்தேன். ஆனால் நான் சற்றும் எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சியை தந்தார் அவர்."என் தலையில இடி இறக்கிட்டாம்பா உன் சித்தப்பன். மருந்தை குடிச்சுட்டு... Read more

Prev Next


நிகழ்வுகள்

எண் : 1/62-14, ரவி காலனி முதல் தெரு,
பவுல் வெல்ஸ் சாலை,
புனித தோமையார் மலை,
சென்னை-600 016,

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :
© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions